உத்தரப்பிரதேசத்தின் கோபால்பூர் கடானா கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரப் தோமர். இவர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார். தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், கடந்த 8ஆம் தேதி இரவு தனது சகோதரர்களுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது, தீரஜ் மற்றும் மோனு ஆகியோரால் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த சவுரப் மீரட் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
தீபாவளியன்று ராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு-பரபரப்பு சம்பவம்
