Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் சாலை விரிவாக்கப் பணி பாதியில் நிறுத்தம்– பொதுமக்கள் சாலை மறியல்!

கரூரில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை விரிவாக்கப் பணி – பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

கரூர் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், சாலையோரங்களில் அதிகளவில் ஜல்லிக்கற்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இதனால் காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மேலும் ஆண்டாங்கோவில் கீழ்பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி, பொதுக்களிப்பிடம், மழைநீர் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் இதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!