Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்வு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்வு!

மேட்டூர்: இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி மேட்டூர் அணை நீர் வரத்து 3,295 கன அடியாக உள்ளது.

மேலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 61 அடியாகவும், நீர் இருப்பு 25.437 டி.எம்.சி. ஆகவும் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனிடையே டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்து வருவதால், அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

error: Content is protected !!