Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வழக்கறிஞர் ஆபாசப் பேச்சு, மிரட்டல்- பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் புகார்!

வழக்கறிஞர் ஆபாசப் பேச்சு, மிரட்டல்- பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் புகார்!

சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் தனது கணவரின் வழக்கறிஞர் தன்னை ஆபாசமாக பேசுவதாகவும் அச்சுறுத்தல் கொடுப்பதாகவும் இதுகுறித்து ஏற்கனவே பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்..

சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா தனது கணவர் மணிகண்டனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள திருமண ரீதியான பிரச்சனைகள் காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் HMOP வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது இந்த நிலையில் தனது கணவருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் என்பவர்
எனக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு வகையில் தொல்லைகளை மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறார் ..

எனது கணவர் தற்பொழுது சிறையில் இருக்கும் சூழ்நிலையிலும் அவருடைய வழக்கறிஞர் ஆனந்தராஜ் என்பவர் எனது வீட்டிற்கு தொடர்ந்து நேரில் வந்து எனது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில் தேவையற்ற தலையீடுகளை செய்து வருகிறார் சொந்த வீட்டிலேயே நான் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ முடியாத சூழல் இருக்கிறது மேலும் வழக்கறிஞர் என்னிடம் தகாத வகையிலும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி என்னை அவமானப்படுத்தியும் அச்சுறுத்தியும் வருகிறார்..

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் மனுக்களை அளித்துள்ளதாகவும் இதுவரை புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை..

இத்தகைய குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனது முந்தைய புகார்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து எனது வீட்டில் எந்தவித அச்சமும் இன்றி நிம்மதியாக பாதுகாப்பாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார்..

error: Content is protected !!