மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாகத் துணை போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் மதிமுகவின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து தென்காசியில் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
