திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக இன்று (நவ.27) நடக்கும் வழக்கு விசாரணையின்போது, காவல் துறை தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அப்போது, நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? அல்லது முதலைக் கண்ணீரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த மதுரை காவல் ஆணையர் தரப்பு, சம்பவத்தின்போது மொத்தம் 5,797 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.
முதலைக் கண்ணீரா? தமிழக போலீசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
