Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை… 

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா,க ல்பகனூர், சிவகங்கைபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மகள் பிரியங்கா (28) . அரசு டாக்டரான இவர் பெரம்பலூர் கல்யாண நகரில் வாடகை வீட்டில் தங்கி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

பிரியங்கா காலை வழக்கம்போல்  பணிக்குச் சென்று பணி முடித்து விட்டு மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.

மதியம் 2மணிக்கு மேல் பிரியங்காவின் தொலைபேசிக்கு அவரது சகோதார் அழைத்த போது, அழைப்பை ஏற்காத காரணத்தால் சந்தேகமடைந்து தனது பெற்றோருக்கு தகவல் சொல்லி நேரில் சென்று பார்க்கச் சொல்ல, பெற்றேர்கள் நேரில் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள் தாழ்ப்பாள் இடப்பட்டு பூட்டப்பட்டு இருந்ததால் பிரியங்காவின் தந்தை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!