Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…..

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.4.2023) சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிட்டீஸ் திட்டத்தின் கீழ், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சியினை தொடங்கி வைத்தார். இப்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள்

நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  , இந்திய கிரிக்கெட் வீரர்  .ஆர்.அஸ்வின் ,   மேயர்  ஆர். பிரியா , மதிப்பிற்குரிய துணை மேயர்  மகேஷ் குமார் ,  முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர்  ககன்தீப் சிங் பேடி ,  இந்திய நாட்டிற்கான பிரெஞ்சு நாட்டின் துணைத் தூதர் லிசா டால்பட் பாரே மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!