Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடகா வெற்றி…….சிம்லா அனுமன் கோயிலில்…. பிரியங்கா வழிபாடு

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 120 இடங்களுக்கு மேல்  முன்னணியில் உள்ளதால், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   இந்த வெற்றியை காங்கிரஸ் நிர்வாகிகள்,  தொண்டர்கள் இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். பெங்களூரு, டில்லி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் சிம்லாவில் உள்ள அனுமான் கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!