Skip to content

தமிழ் மக்கள் பாஜகவை எந்தகாலத்திலும் ஏற்கமாட்டார்கள்… அமைச்சர் உதயநிதி பேட்டி

மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. மாவட்ட கழக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக மூத்த முன்னோடிகள்   ஆயிரம் பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் பொற்கிழியும் மாற்றுத்திறனாளி 60 நபர்களுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை  வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி கூறியதாவது:

பாஜக திமுகவை தொடர்ந்து எதிர்ப்பபதால்,  திமுக நல்ல பாதையில் போய்க் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். ஒட்டுமொத்த தமிழகமே பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்த்தான் செய்யும் எந்த காலத்திலும் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு ஜாலியாக போய்க்கொண்டிருப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!