Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீக்குச்சிகள், மரக்கீற்றுடன் கோலியின் நிழல் ஓவியத்தை வரைந்த ரசிகர்… வீடியோ வைரல்..

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிந்து மவுரியா என்பவர் விராட் கோலியின் ஓவியத்தை கலை நுணுக்கத்துடன் கூடிய நிழல் உருவப்படமாக வரைந்துள்ளார்.  இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மவுரியா தீக்குச்சிகள் மற்றும் மெல்லிய மரக்கீற்றுகளை பயன்படுத்தி ஒரு வடிவத்தை உருவாக்குகிறார். அந்த வடிவத்தின் மீது ஒளியை விழ வைக்கும் போது விராட்

கோலி சிரிப்பது போன்ற நிழல் உருவப்படம் தோன்றுகிறது.  3 நாட்கள் கடும் உழைப்புக்கு பிறகு கிடைத்த பலனாக இந்த நிழல் ஓவியம் உருவாக்கப்பட்டு இருப்பதாக அதில் ஷிந்து மவுரியா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அவரின் முயற்சியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!