Skip to content

பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் பாபநாசம் ரயில்வே கேட்டை தாண்டி இன்று காலை சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மின் கம்பங்கள் மீது மோதியது. இதில் மெயின் ரோட்டில் இருந்த 3 மின் கம்பங்கள், வயலில் இருந்த மின் கம்பங்கள் விழுந்தன. எச்.டி மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அரை

மணி நேரம் அப் பகுதியில் மின் சப்ளை நிறுத்தப் பட்டது. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மின்சார வாரியத்தினர் மின் கம்பங்களை அப்புறப் படுத்தியப் பின்னர் போக்குவரத்து சரி செய்யப் பட்டது. பாபநாசம் போலீசார் விசாரணை மேற்க் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!