மதுரை: பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையில், ‘இந்த பத்திரப்பதிவு செல்லாது’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘நிலம் தொடர்பான பழைய வழக்குகளை மறைத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
