நன்றி : அரசியல் அடையாளம்..
மழை மிதமாக பொழிந்து கொண்டே இருக்க, குடைபிடித்தபடி சுப்புனி காபி கடைக்கு நடந்து வந்தார் காஜா பாய். ஏற்கனவே பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதியும் காத்திருக்க குளிர்ந்த சூழலிலும், அரசியல் பற்றி சூடாக பேச ஆரம்பித்தனர் மூவரும்.
திருச்சி மாவட்ட அதிமுக சர்ச்சை கூடாரமாக மாறி இருக்கிறது என்ற முன்கதையும் தனக்கு தெரிந்த தகவல்களை காஜா பாய் ஆரம்பிக்க, 2 பேரும் காதுகளை திருப்பி கவனமாக கேட்க துவங்கினர். 

இந்த சர்ச்சை ஒருபுறமிருக்கு, திருச்சி மாவட்ட அதிமுகவில் இன்னொரு சர்ச்சையும் வெடித்துள்ளது. வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பரஞ்சோதி. பேனர், போஸ்டர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களோடு, எடப்பாடி,
அவரை தொடர்ந்து திருச்சி மாநகர போலீசில் நடந்த களேபரம் பற்றி சகாயம் திருவாய் மலர்ந்தார். அதாவது தீபாவளி நேரத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்களின் நலன் காக்கவும் என்எஸ்பி ரோட்டில் காவல் உதவி மையம் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த வியாழக்கிழமை காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் காமினி மையத்தை திறந்து வைத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். இந்த செய்தி குறிப்பிட்ட சில நாளிதழ்கள் மற்றும் மீடியாக்களிடம் மட்டுமே வந்தது. வழக்கமாக காவல்துறைக்கென்று அனைத்து பத்திரிகை நிருபர்கள் அடங்கிய ஒரு வாட்ஸ்அப் குரூப் உள்ளது. அந்த குரூப்பில் தான், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஐஎஸ் எஸ்ஐ ஒருவர், வாட்ஸ்அப் குரூப்பில் அழைப்பு விடுக்காமல், தனக்கு வேண்டிய நிருபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளார். திருச்சி மாநகர காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த சம்பவம் பற்றி கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று சகாயம் கூறினார்.
அடுத்ததாக தன் பங்குக்கு சகாயம், நடிகர் விஜய் மேட்டர் பற்றி சொல்ல ஆரம்பித்தார். 2024 பாராளுமன்ற தேர்தலில் விஜய் அரசியலுக்கு வந்து விடுவார் என பேசப்பட்டது. ஆனால் சென்னையில் நடந்த லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று பேசி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக இருந்திருந்தால், இந்நேரம் விஜய் தனது கட்சியை பதிவு செய்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. அதேசமயம், பாராளுமன்ற தேர்தலில் முக்கிய தேசிய கட்சி ஒன்றுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கலாம் என விஜய் முடிவு செய்திருந்தாராம். ஆனால் மத்தியில் அரசியல் ஓட்டம் மாற்றத்தை சந்திக்கலாம் என அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாம். அந்த மாற்றம் நிகழ்ந்தால், சிக்கலில் மாட்டிக்கொள்வோம். எனவே பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்க வேண்டாம் என்ற முடிவை விஜய் எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன என சகாயம் சொல்லி முடிக்க காபி கடை பெஞ்ச் காலியானது.

