திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக இன்று அளித்தனர்.
இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து நூற்றுக்கு மேற்பட்ட
விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட வருவாய் துறை அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.