Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மக்களவை தேர்தலில் ராமரை வைத்து வெற்றி பெற முடியாது… முத்தரசன் …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆட்சி வருகிற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. இதற்காகத்தான் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வருகிற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ராமன், சீதை, லட்சுமணனை காண்பித்து வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை.

மன்னர்களுக்கு, கதாநாயகர்களுக்கு கோயில் என்ற கதைகள் எல்லாம் கூறி அரசியலில் வெற்றி பெற முடியாது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரியவராகவே இருக்கிறார். கண்ணியமான பதவியில் இருக்கும் அவர், களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறார். காந்தியைப் பற்றி அவர் விமர்சன செய்ததை ஏற்க முடியாது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இண்டியா கூட்டணியில் 26 கட்சிகள் உள்ள நிலையில், ஆங்காங்கே சில பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். ஆளுநர் தேநீர் விருந்துக்கு எங்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். அதை நாங்கள் நிராகரித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!