Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

அரியலூர்  ஒன்றிய  முன்னாள் திமுக செயலாளர் ஜோதிவேல் . இவர் நேற்று  அதிமுக மாவட்ட செயலாளர்  தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜோதிவேலுடன்  50க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிஅதிமுக வேட்பாளர் சந்திரகாசன், முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் பாலு, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஓட்ட கோவில் சங்கர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

திமுக வில் சற்று மன வருத்தம் ஏற்பட்டு ஒதுங்கி இருந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜோதி வேலை அதிமுக தங்களுடன் இணைத்துக் கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளது. அரியலூர் தெற்கு ஒன்றியத்தில் மூப்பனார் சமூகத்தில் சற்று செல்வாக்கு உள்ளவர் ஜோதிவேல். திமுகவின் ஒன்றிய செயலாளராகவும் இருந்த ஜோதிவேல், தற்பொழுது அதிமுகவில் இணைந்துள்ளார். வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பின்னர் ஜோதிவேல் எவ்வளவு வாக்குகளை அதிமுகவுக்கு பெற்றுத் தந்துள்ளார் என்பது  தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!