Skip to content
Home » நயாகரா நீர்வீழ்ச்சி அருகே கார் வெடித்து சிதறியது…. தீவிரவாதிகள் தாக்குதலா?

நயாகரா நீர்வீழ்ச்சி அருகே கார் வெடித்து சிதறியது…. தீவிரவாதிகள் தாக்குதலா?

  • by Senthil

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் ரெயின்போ பாலம் உள்ளது. இந்த பாலம் ஒண்டாரியோவை நியூயார்க் உடன் இணைக்கும் 4 எல்லையை கடக்கும் பாதைகளில் ஒன்றாகும்.  மற்றவை லூயிஸ்டன், வேர்ல்பூல் மற்றும் பீஸ் பிரிட்ஜ் உடன் இணைக்கப்படுகிறது.  ரெயின்போ பாலம் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், நயாகரா நீர் வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்கா, கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்துள்ளதாக கனடா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலத்தின் எல்லையில், ஒரு வாகனம் வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்க புலனாய்வு துறை விசாரித்து வருகிறது. இந்த குண்டுவெடிப்பை அடுத்து அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள ரெயின்போ பாலம் மற்றும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனிடையே நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த சம்பவத்தை நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் “உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்” என்று நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!