Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகைகள் பற்றி அவதூறு……டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு…

சேலத்தை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் காந்தராஜ். இவர் முன்னாள் அமைச்சர் ராஜாராமின் தம்பி. தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். கமலின் தசாவதாரம்  உள்பட பல படங்களில் டாக்டர் காந்தராஜ் நடித்துள்ளார்.  தசாவதாரத்தில் டாக்டர் பாத்திரத்தில் வருவார்.

இவர் டியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அவ்போது தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசினாராம். இது குறித்து நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டி தலைவராக உள்ள  நடிகை ரோகிணி  போலீசில் புகார் கொடுத்தார்.  அந்த புகாரின் அடிப்படையில் டாக்டர் காந்தராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.டாக்டர் காந்தராஜ் டிவி டிபேட்களிலும் பங்கெடுத்து பேசுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!