Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் கவிழ்ந்து பிரபல நடிகை பலி….வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சோகம்

இந்தி சினிமா துறையில் சாராபாய் விசிஸ் சாராயாபாய் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைபவி உபத்யா (வயது 30). இவர் திங்கட்கிழமை தனது வருங்கால கணவருடன் காரில் இமாச்சலபிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று சென்றுகொண்டிருந்தார்.  பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வளைவான சாலையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் நடிகை வைபவி காரில் இருந்து வெளியே வர முற்பட்டார். ஆனால், விபத்தில் தலையில் படுகாயமடைந்த வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைபவியுடன் காரில் சென்ற அவரது வருங்கால கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!