Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

நடிகர் ரஜினி ரத்தநாள வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். ரத்தநாள வீக்கத்தை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகர் ரஜினி, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ‘அயோடா’ தமனி, வயிற்றுப் பகுதியில் வீங்கி இருந்தது. இதை, அறுவை சிகிச்சை செய்யாமல், ‘டிரான்ஸ்கதீட்டர்’ மூலம் சரிசெய்ய முடியும்.

அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ், மகாதமனி வீக்கத்தை சரிசெய்யும் வகையிலும், ரத்த நாளத்தை சீரமைக்கவும், ‘ஸ்டென்ட்’ பொருத்தினார். தற்போது, ரஜினி உடல்நிலை சீராகவும், நலமாகவும் உள்ளது. இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினி நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!