Skip to content
Home » நடிகர் விஜய் ஊக்கத்தொகை…. மாணவ, மாணவிகள் சென்னையில் குவிந்தனர்…

நடிகர் விஜய் ஊக்கத்தொகை…. மாணவ, மாணவிகள் சென்னையில் குவிந்தனர்…

  • by Senthil

நடிகர் விஜய்,   தனது பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நிர்வகித்து வருகிறார். இந்த இயக்கம் மூலம் சமீப காலமாக பல்வேறு செயல்பாடுகள் அரங்கேறி வருகிறது. மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சூழ்நிலையில், அரசியல் களத்தில் குதிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகளையும் நடிகர் விஜய் எடுத்து வருகிறார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு

பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். சென்னை நீலாங்கரையில் நடைபெறும்  இந்த நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.

இதற்காக தமிழ் நாடு முழுவதும் இருந்து அவர்கள் இன்று சென்னை வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன்  பெற்றோர்களும் வந்தனர். காலையில் அவர்கள் மண்டபத்துக்குள் வந்ததும் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.  பின்னர் காலை உணவு  வழங்கப்பட்டது.  மதிய உணவும் தயாராகி வருகிறது.  மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!