Skip to content
Home » 10,12ம் வகுப்பு சாதனையாளர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு….. பரிசுகள் வழங்குகிறார்

10,12ம் வகுப்பு சாதனையாளர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு….. பரிசுகள் வழங்குகிறார்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில்  10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:   தமிழ்நாடு, புதுச்சேரியில்  12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற  மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்த்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த  வெற்றிகளை குவித்து  வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வலம் வர  இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம் .

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்புகளில்   அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக சந்தித்து  பரிசுகள் வழங்கினார். இந்த ஆண்டும் நடிகர் விஜய் 234 தொகுதிகளையும் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு  அடுத்த மாதம் பரிசு வழங்க திட்டமிட்டு உள்ளார்.  இதனாலேயே அவர் மீண்டும் சந்திப்போம் என கூறி உள்ளார். கடந்த ஆண்டை விட சிறந்த அளவில் அதிக தொகை கொண்ட பரிசுகள் வழங்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!