Skip to content
Home » காரைக்குடியில் ….அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து

காரைக்குடியில் ….அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து

  • by Senthil

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழ்நாட்டில்  பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார். மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தரும் அமித்ஷா,  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதால் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!