Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை..திருச்சி மேயர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 28-க்கு உட்பட்ட தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து மேயர் மு. அன்பழகனிடம் மனு அளித்தார்கள் .
சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து புதிய சாலை அமைத்தல்,
தற்போதுள்ள பழைய மற்றும் சேதமடைந்த சாலையை முறையாகப் பெயர்த்து அகற்றிய பின்னரே தரமான புதிய தார்ச்சாலை அமைத்தல், கழிவுநீர் தேக்கம் மற்றும் வழிதல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்குதல், திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் , பாலத்தை உடனடியாக மூடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல், சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுப்பது, ,கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை

தீவிரப்படுத்துதல், பூங்கா பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் புதர்களை சீரமைத்து பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் உள்ளிட்டவை மனுக்களாக அழித்தார்கள். மேயர் மாநகராட்சி அலுவலர்களுடன் அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு தேவையான அடிப்படை

வசதிகளை செய்து தரும்படி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். இந்த ஆய்வில் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் பைஸ் அகமது, கமால் முஸ்தபா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!