Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 மாத காலத்தில் தரமான தார் சாலை…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ உறுதி.

தமிழகத்தில் சட்டமன்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது பல்வேறு கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முதல் முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இளங்கோ மீண்டும் இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இன்று அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ, க.பரமத்தி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை காலக்குறிச்சி ஊராட்சி, ராஜபுரம் ஊராட்சி, எலவனூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுக வேட்பாளரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய திமுக வேட்பாளர் இளங்கோ: புஞ்சை காலக்குறிச்சி ஊராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டதால் மிகவும் குண்டும் குழியுமாக இருக்கிறது எனவே ஆட்சி அமைந்த இரண்டு மாத காலத்தில் தரமான முறையில் தார் சாலை அமைத்து தரப்படும் எனவும், அமராவதி ஆற்றில் இருந்து விவசாயத்திற்காக செல்லும் வாய்க்காலை தூர்வாரி கொடுக்கப்படும் மேலும் அடிப்படை வசதி அனைத்தும் உடனடியாக செய்து தரப்படும் என கூறினார்.

error: Content is protected !!