அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி வடிகால் மதகு வழியாக வழிந்து சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. இந்த ஏரியின் கரையில் உள்ளது இடுகாடு இதற்க்கு ஏரியின் கரையை பயன்படுத்தி காலம் காலமாக இறந்தவரின் உடலை எடுத்து சென்று வருகின்றனர். இந்நிலையில் கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த மின்னல் கொடி என்பவர் உயிரிழந்த நிலையில் இறுதி சடங்கிற்காக அவரது உறவினர்கள் மின்னல்
கொடியின் உடலை இடுகாட்டிற்கு தூக்கிச் சென்றனர் செல்லும் வழியில் உள்ள நயினார் ஏரியில் இடுப்பளவிற்கு மேல் தண்ணீர் இருந்த நிலையில் ஏரியில் இறங்கிய உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் நீந்தியப்படி சடலத்தை தூக்கிச் சென்று தகனம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்து உடனடியாக பாலம் மற்றும் சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.