பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில், மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் அங்கு அவ்வப்போது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பலர் கைது செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பீகாரில் உள்ள சிவன், சரண் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பீகார்… கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி
