Skip to content
Home » டில்லி டெஸ்ட்…. ஆஸிக்கு எதிராக 100வது விக்கெட்டை எடுத்த அஸ்வின்

டில்லி டெஸ்ட்…. ஆஸிக்கு எதிராக 100வது விக்கெட்டை எடுத்த அஸ்வின்

  • by Senthil

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானத்தை கடைபிடித்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். கவாஜா அரைசதம் அடித்தார். நிதானமாக விளையாடிய வார்னர் 15 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழக்கூடிய ஸ்டீவ் ஸ்மித்தும், லபுஷேனும் அஸ்வினின் சுழலில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். லபுஷேன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை எடுத்துள்ளது. இந்திய தரப்பில் ஷமி ஒரு விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் இந்திய வீரர்களின்  பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்.  சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தொடக்க ஆட்டக்காரர் கவாஜா விக்கெட்டை சாயத்ததன் மூலம்  ஜடேஜா தனது  டெஸ்ட் போட்டிகளில் தனது 250வது  விக்கெட்டை எடுத்தார். அப்போது கவாஜா 125 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவின் பந்தை தூக்கி அடித்தபோது ராகுலிடம் அது சிக்கி கேட்ச் ஆனது.

மதியம் 140 மணி அளவில் ஆஸ்திரேலியா  47 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து167 ரன்கள் எடுத்திருந்தது.   6வது விக்கெட்டை  தமிழக வீரர் அஸ்வின் எடுத்தார். இவரது பந்தில் அஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி   கோலியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.  இதன் மூலம் அஸ்வின் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். இதற்கு முன் இந்திய வீரர் கும்ப்ளே மட்டும் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!