குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் குன்றத்தூர் அபிராமிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளான அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தண்டனையை நிறுத்திவைக்க இது தகுதியான வழக்கு அல்ல எனக் கூறி ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
குழந்தைகளை கொன்ற வழக்கில்…அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு
