Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்க கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள்….. வானிலை மையம் தகவல்

தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கணினி மாதிரிகள் அடிப்படையில் நாளை மத்திய வங்கக்கடலிலும் டிசம்பர் 2வது வாரத்தில் தென் கிழக்கு வங்கக்கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனால் இவை இரண்டும் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை எனவும் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், அது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 12ம் தேதி இலங்கை மற்றும் தமிழ்நாட்டு கடலோர பகுதிகளை நெருங்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும்,  வானிலை ஆய்வு மையம் இதுவரை வெளியிடவில்லை. கணினி மாதிரிகள் அடிப்படையிலான தரவுகளை மட்டுமே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!