2027-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். மினி ஏலத்தை இந்தியாவிலேயே நடத்துவதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) திட்டமிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக துபாய், ஜெத்தா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்ட நிலையில், அணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு மீண்டும் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐயின் இந்த முக்கிய முடிவு ஐபிஎல் அணிகள் மற்றும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
2027 ஐபிஎல் மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு
