Skip to content
Home » கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில் , “தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவில் வசிக்கும் மகாலெட்சுமி மற்றும் மகாராஜா ஆகியோரின் மகன் திரு. ம. வெற்றி விசுவா என்பவர் சென்னையில் உள்ள SUCHNA MARINE SERVICES PVT LTD என்ற கப்பல் நிறுவனத்தில் DECK CADET  ஆக பணிக்கு சேர்ந்து ஆந்திர மாநிலம், கிருஷ்ணபட்டணம் M.V. Penna Suraksha கப்பலில் பணி செய்து வந்துள்ளார்.கடந்த 7.9.2023 அன்று இரவு 10 மணிக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் தங்களுடைய பெற்றோருடன் பேசிய வெற்றி விசுவா, மறுநாள் விடியற்காலை 4 மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டி இருப்பதால் தூங்கச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

8.9.2023 காலை கப்பல் நிறுவன மேலாளர், வெற்றி விசுவாவின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகன் வேலைக்கு வரவில்லை என்றும், கப்பல் முழுவதும் தேடியும் அவனைக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.வெற்றி விசுவாவின் பெற்றோர்கள் கப்பல் கேப்டனை தொடர்பு கொண்டு, தங்கள் மகனைப் பற்றி கேட்டதற்கு அலட்சியமாக பதிலளித்துள்ளார்.தங்கள் மகன் குறித்து கவலை அடைந்துள்ள பெற்றோர், மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் திரு. வைகோ எம்.பி அவர்களிடம் தங்கள் மகனை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். திரு. வைகோ அவர்களும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அவசரக் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ம.வெற்றி விசுவாவை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’  என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முதல் 2 ஆலோசனை கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது.  இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு , தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கான பிரத்யேக இலச்சினை இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலச்சினை உருவாக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 9 இலச்சினைகள் உருவாக்கப்பட்டு, அதில் 3 இலச்சினைகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 இலச்சினையில் ஒன்று இன்று உறுதி செய்யப்பட்டு வெளிடப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!