அதிராம்பட்டினம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழா 400 வருடங்களுக்கு பிறகு திருக்கோவில் நடைபெற்று வருகிறது. சென்ற 6ம் தேதி கருடாழ்வார் குடியேற்றம் நடைபெற்றது. அதிலிருந்து தொடர்ந்து திருவிழா நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் சூரிய இப்ரபை வாகனத்தில் வேணுகோபாலன் அலங்காரத்திலும் கருட சேவை வைகுண்ட நாதர் திருக்கோலம் அலங்காரத்திலும் சுவாமி விதி உலா காட்சி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது இத்திருவிழா வருகிற 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது தினந்தோறும் இரவு சாமி வீதி உலா காட்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
அதிராம்பட்டினத்தில் 400 ஆண்டுகளுக்குப் பின் பிரம்மோற்சவ விழா!
