Skip to content
Home » வாக்களிக்க நாங்களும் ரெடி… மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி…

வாக்களிக்க நாங்களும் ரெடி… மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டம், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 150-

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் தொடங்கி ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி நபர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், “எனது ஓட்டு எனது பெருமை” (MY VOTE MY PRIDE APRIL 19) என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!