Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சென்னை ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் ஆகியவை சாா்பில் நடந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட 146 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 36 ஆயிரத்து 271 மதிப்பில் மூன்று சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகள், செயற்கை கால், கைத்தடி, மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இவற்றை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் வழங்கினாா். கும்பகோணம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி தாளாளா் வாசுதேவன், செயலா் லோக. சந்திரபிரபு, ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவன அலுவலா்கள் அரசு, ஹரிமதி, கல்யாணகுமாா், மஞ்சுநாத், ஆதித்யா, ஒன்றியக் குழு உறுப்பினா் தங்க. தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!