Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 800-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.

கரூரில் 800-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.

கரூர் மாவட்டத்தில் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தாந்தோன்றிமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

கரூர், கரூர் புறநகர் மற்றும் குளித்தலை காவல் சரகங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.

சிங்கப் பெண்கள் படை, சைபர் கிரைம் பிரிவு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தங்களது செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வாகனத் தணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது குறித்து காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இதற்கிடையே, மைதானத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததைக் கவனித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பந்தல் அமைக்காமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது குறித்து அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து, காவலர்கள் மற்றும் அதிகாரிகளை நிழலில் நிற்க வைத்து தனது அறிவுரைகளை வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் திறன் மேம்பாட்டையும், பொதுமக்களிடம் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் வலியுறுத்தும் வகையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

error: Content is protected !!