Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடியை சந்திக்கச் சென்ற விவசாயிகள் வீட்டுக்காவலில் வைப்பு

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளிக்க இருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் திருச்சியில் வீட்டுக்காவலில் வைப்பு.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை வருகை தரவுள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் உரிய நீரைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமரை சந்தித்து மனு அளிக்க செல்லவிருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்றுத் தருமாறு கோரிக்கை மனு அளிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறையினர் விவசாயிகளை வெளியே செல்ல அனுமதிக்காமல் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

error: Content is protected !!