முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் இவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குடும்ப நண்பராகவும் ,நெருங்கிய நண்பராகவும் இருந்து வருகிறார்.
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத்

தழுவினார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே தற்போது சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் உள்ள அவரது வீடு மட்டுமின்றி, சென்னை உள்பட 6 இடங்களில் அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளிடம் அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறப்பட்டதா? முறைகேடுகள் நடைபெற்றதா? என்பது குறித்து ஆவணங்களை மையமாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை குறித்து தகவல் அறிந்த முன்னாள் அ மைச்சர் கே.என்நேரு மற்றும் திமுகவினர் தற்போது அன்பில் மகேஷ் இல்லம் முன்பு குவிந்து வருகின்றனர்..
