Skip to content
Home » சந்திரயான் -3….. லேண்டர் தனியாக பிரிந்தது

சந்திரயான் -3….. லேண்டர் தனியாக பிரிந்தது

  • by Senthil

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த ஜூலை  மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது.  ‘சந்திரயான்-3’ விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், ‘சந்திரயான்-3’ 100 கிலோ மீட்டர் தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி 23-ந் தேதி  நிலவின் தென் துருவத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் தரையிறங்க இருக்கிறது.  இந்த நிலையில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிரிக்கப்பட்ட உந்துவிசை கலன் & லேண்டர் நிலவில் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!