Skip to content
Home » சென்னை ஏர்போட்டில் இணையதள சேவை பாதிப்பு…. விமானங்கள் புறப்படுவதில் தாமதம்…

சென்னை ஏர்போட்டில் இணையதள சேவை பாதிப்பு…. விமானங்கள் புறப்படுவதில் தாமதம்…

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால்  விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.  அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

flight

ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர் . துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி,  லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

domestic flights

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 9 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.  இதன்காரணமாக பாங்காக், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண அட்டை, உடமைகள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!