Skip to content
Home » சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

  • by Senthil

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!