Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமியை வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை…

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே கோவிலடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சங்கர் (39). திருமணமான இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இச்சிறுமியிடம் சங்கர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்ப வைத்து, பாலியல் வல்லுறவு செய்தார்.

இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் செய்தார். இதையடுத்து, திருவையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜ் விசாரித்து சங்கருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!