Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அப்பல்லோவில் இருந்து…. முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்

முதல்வர்  மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதியிலும் அவர் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  இந்த நிலையில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. மேலும், வழக்கமான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியது இருந்தது. எனவே அவர் நேற்று மாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் வெங்கடாசலம் நேற்று மாலை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து இன்று அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவார்” என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல் பரிசோதனை முடிந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வீடு திரும்பினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!