Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாமல் போதை பொருட்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்த தவறிய குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க அரசை கண்டித்து
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புள்ளம்பாடி அண்ணா திடலில் மகளிர் அணி செயலாளரும், அ.தி.மு.க.
செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான
பா.வளர்மதி தலைமையில் இன்று நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் டி.என்.சிவக்குமார்,
லால்குடி சட்டமன்ற உறுப்பினர்,மகளிர் அணி இணைச் செயலாளர் லீமா ரோஸ்மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் புள்ளம்பாடி நகரச் செயலாளர் ஜேக்கப் அருள்ராஜ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:-
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நாங்கள் கழிப்பறை இல்லாததால் சாலை ஓரங்களில் இயற்கை உபாதைக்கு செல்கிறோம் ஆதலால் எங்களுக்கு கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் பேரில் அனைத்து கிராமப்புறங்களிலும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டார். சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செந்தமிழ்ச்செல்வி இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் கழிப்பறைகள் மூடப்பட்டது. செந்தமிழ் செல்வி படுகொலை செய்யப்பட்டு 16 நாட்கள் கடந்தும் இதுவரை உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து இதுவரை தமிழக முதல்வர் விஜய் வாயை திறக்கவில்லை. குற்றவாளிகள் வெளிநாட்டிலிருந்து வரவில்லை இந்த சுற்று வட்டாரப் பகுதியில் இருந்தவன் தான் செந்தமிழ் செல்வியை கொன்றுள்ளான். உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
பழனியில் 100 கோடி மதிப்புள்ள இடத்தை வெறும் 2 கோடிக்கு பத்திரம் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்டு மோசடி நடந்துள்ளது. அதனால் போலீசார் உண்மை குற்றவாளியை பிடித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!