Skip to content
Home » கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை தலைமை செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த அறிவிப்பை எப்படி ஏற்க முடியும். பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டும் கவர்னர், அதே கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் நடத்தினார். தவறுகளை முறையாக சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது. செயலாளரை கூட சந்திக்க முடியவில்லை என கவர்னர் தெரிவிக்கிறார். ஆனால், நான் இல்லாமலேயே பல கூட்டங்களை அவர் நடத்தி இருக்கிறார்.  பல்கலையில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார் கவர்னர் ஆர். என். ரவி. அரசியல் செய்யும் சிந்தனையுடன் அவர் செயல்பட்டு வருகிறார். உயர்கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு கவர்னர் பேச வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் சில குறைகள் இருக்கலாம். தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது. தவறுகளை அமைச்சராகிய என்னிடமோ, செயலாளரிடமோ தெரிவிக்கலாம். ஆனால், நேரடியாக பத்திரிகைக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசையே மதிக்காமல்கவர்னர் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!