Skip to content
Home » தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

  • by Senthil

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று கோவையில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில்  கிளஸ்டர் பாதிப்பாக , அதாவதுகொரோனா கொத்து கொத்தாக பரவவில்லை.   தனி நபர் பாதிப்பு தான் உள்ளது. எனவே முக கவசம் அணிவது அவசியம்.சளி, இருமல், காய்ச்சல் இருந்தாலே ஆர்.டிபிசி ஆர் சோதனை நடத்தப்படும்.  ஆக்சிஜன், மருந்துகள்,  படுக்கைகள்  தயார் நிலையில் உள்ளது.   போதிய மருந்துகள் உள்ளது.விமானங்களில் வருவோரில் அதிகமானவர்களுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

இவ்வாற அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!