Skip to content
Home » ஆஸ்கார் விருது அறிவிப்பு…. சிறந்த நடிகர் சிலியன் மெர்பி

ஆஸ்கார் விருது அறிவிப்பு…. சிறந்த நடிகர் சிலியன் மெர்பி

  • by Senthil

உலகம் முழுவதும் திரை துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மற்றும் கவுரவம் அளிக்கும் விருதுகளாக ஆஸ்கார் விருதுகள் அறியப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சிறந்த திரைப்படத்திற்கான (Best Picture) ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) வென்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மெர்பி நடிப்பில் வெளியான ஓப்பன்ஹெய்மர்  திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

சிறந்த நடிகைக்கான (Best Actress) ஆஸ்கர் விருதை நடிகை இமா ஸ்டோன் வென்றுள்ளார். புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை இமாஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்காக இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றார்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் சிலியன் மெர்பி. ஓப்பன்ஹெய்மர் படத்தில் நடித்ததற்காக சிலியன் மெர்பிக்கு  சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆவண திரைபப்டத்திற்கான (Best Documentary Feature) ஆஸ்கர் விருதை 20 டேஸ் இன் மரியப்போல் (20 Days in Mariupol) ஆவணப்படம் வென்றுள்ளது.

சிறந்த ஆவண குறும்படத்திற்கான (Best Documentary Short) ஆஸ்கர் விருதை தி லாஸ்ட் ரிபெர் ஷாப் (The Last Repair Shop) குறும்படம் வென்றுள்ளது.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான (Best Live Action Short) ஆஸ்கர் விருதை தி வொண்டர்புல் ஸ்டோரி ஆப் ஹெண்ட்ரி சுகர் (The Wonderful Story of Henry Sugar) குறும்படம் வென்றுள்ளது.

சிறந்த ஒலி அமைப்புக்கான (Best Sound) ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த துணை நடிகைக்கான (Best Supporting Actress) ஆஸ்கர் விருதை தி ஹொல்ட் ஓவர் (The Holdovers) திரைப்படத்திற்காக டாவினி ஜாய் ரண்டொல்ப் வென்றார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான (Best Animated Feature) ஆஸ்கர் விருதை தி பாய்ஸ் அண்ட் தி ஹிரோன் (The Boy And The Heron) திரைப்படம் வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!