Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கெஜ்ரிவால் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மன்….. டில்லி ஐகோர்ட் தடை

டில்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால். இவர்டில்லியின் சாந்தனி தொகுதி மற்றும் உத்தர பிரதேசத்தில் ஷஹீதாபாத் தொகுதி என இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பதாக பாஜகவின் ஹரிஷ் குரானா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சுனிதா கெஜ்ரிவால் வரும் 18 ம் தேதி ஆஜராக வேண்டுமென டில்லி பெருநகர குற்றவியல் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து சுனிதா கெஜ்ரிவால், டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் நீதிபதி அமித் பன்சால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வருகிற 2024 பிப்ரவரி 1 ம் தேதி வரை சுனிதா கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்குத்தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!