Skip to content
Home » டில்லியில் கண்கவர் குடியரசு தின விழா….. ஜனாதிபதி முர்மு கொடியேற்றினார்

டில்லியில் கண்கவர் குடியரசு தின விழா….. ஜனாதிபதி முர்மு கொடியேற்றினார்

  • by Senthil

 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில்  பிரதமர் மோடி தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு சென்றார். குடியரசு தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வண்ணமயமான தலைப்பாகையுடன் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார். பிரதமரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் அவரது மனைவியுடன் விழாவுக்கு வருகை தந்தார்.

பின்னர் குடியரசு அதிபர் மாளிகையில் இருந்து பிரத்யேக குதிரை வாகனத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தார். அவரது வாகனத்துக்கு முன்பும், பின்பும் குதிரையில் வீரர்கள் அமர்ந்து வந்தனர். அவருடன் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவியும் சாரட் வண்டியில் வந்தனர். அவர்களைப் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர், முப்படை தளபதிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி திதிர திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.  அதைத்தொடா்ந்து முப்படைகளின்  அணிவகுப்பு மரியாதை நடந்தது.  பல்வேறு மாநில அலங்கார ஊர்திகள்,  அணிவகுத்து வந்தன.   பின்னர்  கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பகல் 12 மணி வரை நடந்தது.

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுடெல்லி 28 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு  இருந்தது.. அணிவகுப்பு நடைபெற்ற  கடமைப் பாதைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 14,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுஇருந்தனர்.

குடியரசு தின விழாவில் சுமார்77,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்  பங்கேற்றனர். பாதுகாப்பு சோதனைகளுக்காக காலை 8 மணிக்கே விழா நடைபெறும் இடத்துக்கு அவர்கள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு  இருந்தது. அவர்களுக்கு உதவ ஆங்காங்கே சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் 1,300 விமானங்கள் இயக்கப்படுகின்றன. குடியரசு தின விழா நடைபெறும் காலை 10.20 முதல் 12.45 மணி வரைவிமானங்கள் புறப்பட, தரையிறங்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.  விமானப் படை விமானங்கள், ஆளுநர், முதல்வர் பயணம் செய்யும் விமானங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு  இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!